BB Tamil 9: `அவருக்கு பதில் இவர்' கமிட்மென்ட்டுக்காக அவசரமாக வெளியேறினாரா கெமி?

Spread the love

விஜய் டிவியில் கிட்டத்தட்ட பாதி நாட்களைக் கடந்து விட்டது பிக் பாஸ் சீசன் 9. சமூக ஊடக பிரலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் கலந்துகொள்ள 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பிறகு நான்கு சின்னத்திரை பிரபலங்கள் வைல்டு கார்டு மூலம் இணைந்தனர்.

தற்போது வரை நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, துஷார், பிரவீன், கலையரசன், கெமி உள்ளிட்டோர் எவிக்ஷனில் வெளியேறி இருக்கிறார்கள்.

மீதமுள்ள போட்டியாளர்கள் தங்களுக்குள் தினமும் ஏதாவதொரு பஞ்சாயத்தைக் கிளப்பி ஷோவில் எப்படியாவது தொடர வேண்டுமென முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த வாரம் எவிக்ஷனில் கெமி வெளியேறினார்.

இந்நிலையில் கடந்த வாரம் வெளியேறி இருக்க வேண்டியது ரம்யாதான் என்றும் கடைசி நேரத்தில்தான் அது மாற்றப்பட்டு கெமி வெளியேறியதாகவும் ஒரு தகவல் தெரியவர நிகழ்ச்சி தொடர்புடைய சிலரிடம் பேசினோம்.

‘கெமி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான அக்ரிமென்ட்டில் கையெழுத்து போடும் போதே திரைப்படம் ஒன்றில் கமிட் ஆகியிருக்கிறார். அடுத்த சில தினங்களில் கெமி ஷூட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டியிருக்கிறதாம்.

bigg boss kemi
bigg boss kemi

படத்தின் தயாரிப்பு தரப்பு பிக் பாஸ் செல்வதற்கு முன்பே ஷூட்டிங் குறித்து கெமியிடம் பேசியதாகவும் ஆனால் ஷெட்யூலில் ஏதாவது மாற்றம் வரலாம், அதனால் ‘பார்த்துக் கொள்ளலாம்’ என்கிற மன நிலையில் அவர் பிக் பாஸில் கலந்து கொண்டதாகவும் சொல்கிறார்கள்.

இப்போது சம்பந்தப்பட்ட படக்குழு ஷூட்டிங்கிற்கு தயாராகிவிட்ட நிலையில், கெமி நிகழ்ச்சியில் தொடர்ந்து வந்திருக்கிறார். எனவே படக்குழுவினர் சேனலில் பேசி அவரை எவிக்ட் செய்யுமாறு கேட்டதாகவும் தெரிய வருகிறது.

எனவே கடந்த வார எவிக்ஷன் புராசஸில் வெளியில் வந்திருக்கிறார். நிஜத்தில் ஓட்டுகளின் அடிப்படையில் பார்த்தால் கடந்த வாரம் ரம்யாதான் வெளியில் வந்திருக்க வேண்டியது’ என்கிறார்கள் இவர்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *