தற்போது இரண்டாவது புரொமோ வெளியாகியிருக்கிறது. அதில் கம்ருதீனுக்கும், அரோராவுக்கும் சண்டை நடக்கிறது.
துஷார், துஷார், துஷார்”ன்னு எத்தனை டைம் சொல்லுவீங்க. நான் விளையாடுறேன், விளையாடல அது என் இஷ்டம் கம்ருதீன். உனக்கு எதாவது பிரச்னைனா என்கிட்ட மோது. துஷார் போனதை வச்சு எத்தனை நாள் என்னை காயப்படுத்துவீங்க ” என அரோரா கோபப்பட்டு கம்ருதீனிடம் கத்துகிறார்.
“துஷார் வெளிய போயிட்டான், என்னைய ஞாபகம் வச்சுருப்பானான்னுகூட தெரியல அப்படின்னு நீ தான் சொன்ன” என கம்ருதீன் அரோராவிடம் சொல்ல “நான் அப்படி சொன்னனா” என அரோரா கத்த இருவரும் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.