வியானா – அமித் சண்டை, சபரி – அரோரா வாக்குவாதம், பார்வதி அழுகை என வழக்கம் போல இந்த டாஸ்க்கிலும் பிக் பாஸ் வீடு கலவரமானது.
வார இறுதி எபிசோடிற்காக நேற்று (நவ.29) என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி, வீட்டில் நடந்த சண்டைகள் குறித்தும், வீட்டு தலையாகச் சரியாகச் செயல்படாத FJ குறித்தும் விசாரித்தார்.
இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் இரண்டாவது புரொமோவில், “”நீட்டிப்பு’, ‘துண்டிப்பு’ இந்த வீட்டில் யாருடன் உங்கள் உறவை நீட்டிக்க வேண்டும் அல்லது உறவைத் துண்டிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்” என விஜய் சேதுபதி கேட்கிறார்.