BB Tamil 9: “என்னை ஏமாத்திடுவான்னு பயமா இருக்கு"- பாரு குறித்து கம்ருதீன்

Spread the love

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. நேற்று நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர்.

இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார்.

பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க் நடக்க இருக்கிறது.

இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் கம்ருதீனுக்கும், பார்வதிக்கும் வாக்குவாதம் நடக்கிறது.

BB Tamil 9
BB Tamil 9

“மறுபடியும் என்னை ஏமாத்திடுவான்னு எனக்கு பயமா இருக்கு. ஏற்கனவே திவாகர் பேச்சைக்கேட்டு என் பேரை கெடுத்திட்டா. பேட் டச்சுன்னு சொன்னா. ஆனா அம்மா சத்தியமா நான் எதுவும் பண்ணல” என்று பார்வதி குறித்து வினோத் மற்றும் அமித்திடம் கம்ருதீன் சொல்ல,

“என்னென்னமோ பேசுறான். பேமிலி வர்றதுக்காக இதெல்லாம் மறுபடியும் பேசுறான்” என்று பார்வதி கூறினார். ” என் வாழ்க்கையைப் பத்தி நீ யோசிச்சியா” என கம்ருதீன் பார்வதியை கேள்வி கேட்டார்.

தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாவது புரொமோவில், ” அன்னைக்கு எனக்கு என்ன தோணுச்சோ அதை நான் உன்கிட்ட வெளிப்படுத்திட்டேன்” என்று பார்வதி சொல்ல கம்ருதீன் கோவப்படுகிறார்.

BB Tamil 9
BB Tamil 9

“ஏன் இப்படி கோவப்படுற” என்று பார்வதி கேட்கிறார். “இனி வாழ்நாள் முழுசும் உன்கிட்ட பேசமாட்டேன் பாரு” என்று கம்ருதீன் காட்டமாகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *