BB Tamil 9: `என்னை பாம்புன்னு சொல்ற அளவுக்கு என்ன பண்ணிட்டேன்?"- சண்டைப்போட்ட ரம்யா; அழும் சாண்ட்ரா

Spread the love

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 94 நாள்களைக் கடந்துவிட்டது.

கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.

கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில், சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார்.

BB Tamil 9
BB Tamil 9

இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் தொடங்கி இருக்கிறது. பழைய போட்டியாளர்களான வியானா, திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ், ரம்யா, அப்ஷரா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாவது புரொமோவில் ரம்யா, சாண்ட்ராவிடம் வாக்குவாதம் செய்கிறார்.

“என்ன பத்தி பின்னாடி பேசுனாங்கள்ள அதுதான் உண்மையான சாண்ட்ராவா? இல்ல நான் போகும்போது என்னைக் கட்டி புடிச்சு அழுதாங்கள்ள அதுதான் உண்மையான சாண்ட்ராவா?” என ரம்யா கேள்வி கேட்கிறார்.

BB Tamil 9
BB Tamil 9

“நான் நடிக்கிறேன்னு தான் எல்லாரும் சொல்றாங்க. அப்படியே வச்சுக்கோ” என சாண்ட்ரா பதிலளிக்கிறார். “என்னை பாம்புன்னு சொல்ற அளவுக்கு நான் என்ன பண்ணிட்டேன். வெறும் நடிப்புதான். நடிச்சிட்டு தான் இருக்காங்க. அந்த வீடியோவை பார்க்கும்போது எனக்கு எப்படி இருந்திருக்கும்? ” என ரம்யா கோபப்படுகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *