BB Tamil 9: "என்னை மன்னிச்சிடு"- ஆதிரையிடம் மன்னிப்பு கேட்ட FJ

Spread the love

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 65 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.

இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் ‘வீட்டு தலை’-யாக தேர்வாகியிருக்கிறார்.

மேலும் இந்த வாரம் ‘வழக்காடு மன்றம்’ டாஸ்க்கை ஹவுஸ் மேட்ஸ்க்கு பிக் பாஸ் கொடுத்திருக்கிறார்.

BB Tamil 9
BB Tamil 9

இந்த டாஸ்க்கில் நேற்று (டிச.9) ஆதிரை மீது வழக்கு தொடுத்திருந்த வினோத் வெற்றி பெற்றார்.

இதனைத்தொடர்ந்து இன்று வெளியான இரண்டாவது புரொமோவில், பார்வதி, FJ மீது வழக்கு தொடுத்திருந்தார்.

இதனால் FJக்கும், பார்வதிக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. “நீ லவ் பண்ணிட்டு தான் இருக்க பார்வதி.

அதுவும் மைக்கை மறைச்சு வச்சு லவ் பண்ணிட்டு இருக்க” என FJ பார்வதியைப் பார்த்து சொன்னார்.

BB Tamil 9
BB Tamil 9

“இந்த டாஸ்க்கில FJ தோத்துட்டதால என்கிட்ட இருந்து வார்த்தையை வாங்க பார்க்குறாரு.

நான் இந்த வீட்டில என்ன வேணாலும் பண்ணுவேன். அதை கேட்க FJ யாரு” என சபரியிடம் பார்வதி சொல்லிக்கொண்டு இருந்தார்.

தற்போது மூன்றாவது புரொமோ வெளியாகியிருக்கிறது. இதில் ஆதிரை, FJ மீது வழக்கு தொடுத்திருக்கிறார்.

BB Tamil 9
BB Tamil 9

“என் கூட நெருக்கமா பழகினதுனால அவங்க கேம்மை இழக்குறாங்களோன்னு தோணுச்சு” என FJ சொல்ல “என்னை வச்சு ஒரு விக்டிம் கார்டு பிளே பண்ணாரோன்னு தோணுது. எனக்கு இதுக்கு ஒரு சொல்யூஷன் வேணும்” என்று ஆதிரை கேட்கிறார்.

அதற்கு FJ “என்னை மன்னிச்சிடு” ஆதிரை என்று மன்னிப்பு கேட்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *