BB Tamil 9: “என் கிட்ட பேசாத உன் கால்-ல கூட விழுறேன்”- பார்வதி காலில் விழுந்த ரம்யா | parvathy, ramya argument

Spread the love

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 58 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை.

மேலும் ஹவுஸ்மேட்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரை பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்திருந்தார்.

பல நாள்கள் வெளியே இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆதிரை பார்த்துவிட்டு வந்ததனால் அவரது ஆட்டம் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் மூன்றாவது புரொமோவில் பார்வதி, ரம்யா, கம்ருதீன் மூவருக்கும் சண்டை நடக்கிறது.

“நான் சொல்லும்போது ஏன் யாருமே கேட்கல” என பார்வதி கேட்க, “இந்த விஷயத்தை நீ தான் சொன்ன, நான் சொன்னேன்னு யார்கிட்டையும் சொல்லவே இல்லையே” என ரம்யா சொல்கிறார்.

இதனிடையே பார்வதிக்கு ஆதரவாக கம்ருதீன் பேச கம்ருதீனுக்கும், ரம்யாவுக்கும் வாக்குவாதம் ஆகிறது. “என் கிட்ட பேசாத உன் கால்-ல கூட விழுறேன்” என ரம்யா பார்வதியின் காலில் விழுந்து அழுகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *