பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 60 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை.
மேலும் ஹவுஸ்மேட்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரை பிக் பாஸ் வீட்டிற்கு ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார்.
பல நாள்கள் வெளியே இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆதிரை பார்த்துவிட்டு வந்ததனால் அவரது ஆட்டம் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் புரொமோவில் எந்த இரண்டு நபர்கள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மேடையில் ஃபைனல் ரிசல்ட்டிற்காக நிற்பார்கள் என்று கேட்கப்பட்டிருக்கிறது.