BB Tamil 9: “திவ்யா பாருவோட ரூட் எடுத்துட்டாங்க" – அமித்திடம் புகார் மனு வாசிக்கும் சாண்ட்ரா

Spread the love

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர்.

இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருக்கிறார்.

நாமினேஷனில் சாண்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்வதி, அமித், சுபிக்ஷா, திவ்யா கணேஷ், சபரி, அரோரா, ஆதிரை ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.

BB Tamil 9
BB Tamil 9

பிரஜின் வெளியே சென்றதிலிருந்து சாண்ட்ரா ஏதோ ஒரு காரணங்களைச் சொல்லி அழுதுகொண்டே இருந்தார்.

இன்று வெளியான முதல் புரொமோவில் சாண்ட்ரா அமித்திடம் திவ்யா குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்.

அவர்களின் உரையாடலில் அமித், திவ்யா அட்டேன்ஷன் சீக்கிங்… லைட்டா தொட்டாலே ஆவ்வ்வ்…னு கத்துறா எனப் பேசிக்கொண்டிருக்கிறார்.

BB Tamil 9
BB Tamil 9

சாண்ட்ராவின் பங்குக்கு, `திவ்யா பாருவோட ரூட் எடுத்திட்டாங்க. இந்த வாரம் வொர்ஸ்ட் பர்ஃபாமர்தான் திவ்யா. இப்போ நம்மகிட்ட சாண்ட்ரா ஏன் பேசலனு கேட்டுட்டு இருக்கிறவ, பெஸ்ட் – வொர்ஸ்ட் பர்ஃபாமர் டேல பாக்கணும். அப்போதான் அவங்களைப் பத்தி முழுசா தெரியும்” என அமித்திடம் பேசுகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *