வியானா – அமித் சண்டை, சபரி – அரோரா வாக்குவாதம், பார்வதி அழுகை என வழக்கம் போல இந்த டாஸ்க்கிலும் பிக் பாஸ் வீடு கலவரமானது.
வார இறுதி எபிசோடிற்காக நேற்று (நவ.29) என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி, வீட்டில் நடந்த சண்டைகள் குறித்தும், வீட்டு தலையாகச் சரியாகச் செயல்படாத FJ குறித்தும் விசாரித்தார்.
இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் புரொமோவில் ஹவுஸ் மேட்ஸ் எழுதிய மொட்டை கடுதாசியை விஜய் சேதுபதி வாசிக்கச் சொல்கிறார்.
“பாரு நீங்க ஏன் இப்படி ஒரு கேவலமான மைண்ட் செட்ல இருக்கீங்க”, “கம்மு நீ குழந்தைத் தனமாக இருப்பதைப் பார்க்கும்போது இன்னும் இன்னும் ரசிக்கத்தான் தோணுது”, “கானா வினோத்தை நாமினேட் பண்ணுங்க, 3 வாரமா நாமினேஷன்-ல இருந்து தப்பிச்சிட்டு இருக்காரு”, “”FJ என் ப்ரெண்ட்’னு சொல்லி ஒண்ணு பண்ற அது நல்லா இல்ல” என ஹவுஸ் மேட்ஸ் அந்த மொட்டை கடுதாசியை வாசிக்கின்றனர்.