BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் ஆதிரை; ஷாக்கான FJ, வியானா

Spread the love

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. 20 பேருடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர்.

இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸிடம் பேச வைத்திருந்தார்.

BB Tamil 9
BB Tamil 9

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்றது.

வியானா – அமித் சண்டை, சபரி – அரோரா வாக்குவாதம், பார்வதி அழுகை என வழக்கம்போல இந்த டாஸ்க்கிலும் பிக் பாஸ் வீடு கலவரமானது.

வார இறுதி எபிசோடிற்காக நேற்று (நவ.29) என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி, வீட்டில் நடந்த சண்டைகள் குறித்தும், வீட்டு தலையாக சரியாகச் செயல்படாத FJ குறித்தும் விசாரித்தார்.

BB Tamil 9
BB Tamil 9

இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் மூன்றாவது புரொமோவில், பிக் பாஸ் வீட்டில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு வெளியேறிய ஆதிரை மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

ஆதிரையின் பிக் பாஸ் என்ட்ரியால் ஹவுஸ் மேட்ஸ் சர்ப்பரைஸாக f J வும், வியானாவும் மட்டும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *