BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் திடீர் திருப்பம் – பணப்பெட்டி எடுத்து வெளியேறினார் கானா வினோத்!

Spread the love

விஜய் டிவியில் கிளைமேக்ஸை நெருங்கி விட்டது பிக்பாஸ் தமிழ் சீசன் 9.

வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேருடன் அக்டோபர் முதல் வாரம் தொடங்கியது நிகழ்ச்சி.

இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார்.

பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்ட மற்றவர்கள் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறினர்.

கானா வினோத் நண்பருடன்
கானா வினோத் நண்பருடன்

முன்னதாக இந்த சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால்  நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்ததால் டிவி முகங்களான அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் சென்றனர்.

வைல்டு கார்டு போட்டியாளர்களில் அமித் பார்கவ், பிரஜின் இருவரும் எவிக்ட் ஆகி வெளியில் வந்து விட்டனர்.

கடந்த வாரம் ஒரு அதிரடித் திருப்பமாக கமருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பப் பட்டனர்.

Bigg Boss Tamil Season 9
பிக்பாஸ் தமிழ் சீசன் 9

இந்த நிலையில் சபரி, திவ்யா கணேஷ், வினோத், சாண்ட்ரா, அரோரா,விக்ரமன் ஆகிய ஆறு பேரும் இறுதிச் சுற்றுக்குத் தயாராக இருந்த நிலையில் சில இந்த வாரம் பணப்பெட்டி வைக்கப்பட்டது.

இந்த முறை டாஸ்க்கை கொஞ்சம் வித்தியாசமாக வைத்து பணம் அதில் சேர்க்கப்பட்டது.

தற்போது கிடைத்த தகவல் படி பணப்பெட்டி டாஸ்க் முடிந்து விட்டதாக தெரிய வருகிறது. அதாவது கானா வினோத் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறாராம்.

பெட்டியில் இருக்கும் பணத்தின் மதிப்பு பனிரெண்டு லட்சத்துக்கு மேல் இருக்கலாம் என்கிறார்கள்.

பிக் பாஸ் சீசன் 9ல் டைட்டில் வெல்வார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து வெளியேறி இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *