பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 81 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர்.
இந்த வாரத்திற்கான வீட்டுத் தலைவராக கம்ருதீன் செயல்படுகிறார்.
பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது.
அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி, கம்ருதீன், அரோரா, விக்ரம் ஆகியோரின் குடும்பத்தினர் வந்துவிட்டனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் சுபிக்ஷாவின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். “பீட் பாக்ஸை இதோட நிப்பாட்டு. நல்லாவே இல்ல, அதை பண்ணாத.
பாரு, சாண்ட்ராவை நம்பாத. யாரை நீ ரொம்ப நம்புறியோ அவங்கதான் உனக்குக் கெடுதல் நினைப்பாங்க.