BB Tamil 9: ” “முதல்ல கத்தாத. வீட்டு தலையாகி எதாச்சும் பண்ணிருவியோன்னு பயமா இருக்கு”- FJ | FJ, Aurora argument

Spread the love

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர்.

இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருக்கிறார்.

நாமினேஷனில் சாண்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்வதி, அமித், சுபிக்ஷா, திவ்யா கணேஷ், சபரி, அரோரா, ஆதிரை ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் அடுத்த வாரத்திற்கான “வீட்டு தலை’ டாஸ்க் நடந்தது.

‘முடிஞ்சா மிதி’ என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த டாஸ்க்கில் ஹவுஸ் மேட்ஸ் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் ஆதிரையும், FJ-வும் சேர்ந்து விளையாடினர். அப்போது விக்ரமுக்கும், FJ-வுக்கும் சண்டை நடந்தது. “கால்ல புடிச்சு ஏன் இழுக்குறீங்க. எல்லார்கிட்டையும் பாசமா இருக்க மாதிரி நடிச்சிட்டு ஆக்ரோஷமா நடந்துக்குறீங்க” என FJ விக்ரமை சாடினார்.

விக்ரம் அதனைக் கண்டுகொள்ளாமல் கேம்மில் கவனம் செலுத்தினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *