BB Tamil 9: யாருக்கு எவ்வளவு சம்பளம்?- அதிக சம்பளம் இவருக்கா?!

Spread the love

விஜய் டிவியில் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 9 விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.

இருபது பேருடன் தொடங்கிய சீசனில் தற்போது நந்தினி, பிரவீன் காந்த், அப்சரா, ஆதிரை, துஷார், பிரவீன், கலையரசன் ஆகிய ஏழு பேர் வெளியேறிவிட்டனர்.

ஆரம்பத்தில் சமூக ஊடக பிரபலங்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றிருந்த நிலையில் பிறகு வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பிரஜின், சான்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் ஆகிய சின்னத்திரை பிரபலங்கள் நால்வரும் உள்ளே சென்றனர்.

ஒவ்வொரு சீசனின் போதும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து நாம் வெளியிட்டு வந்துள்ளோம்.

அந்த வகையில் பிக் பாஸ் ரசிகர்கள் தெரிந்து கொள்வதற்காக இந்த சீசன் நிலவரம் குறித்தும் நிகழ்ச்சி தொடர்புடைய வட்டாரங்களில் சிலரிடம் பேசினோம்.

Bigg Boss Tamil 9
Bigg Boss Tamil 9

‘இந்த சீசன்ல முக்கால்வாசிப் பேர் சமூக ஊடக பிரபலங்கள்ங்கிறதால அவங்க வெளியில சம்பாதிக்கிற விபரங்கள் நிகழ்ச்சிக்கான நேர்காணலின்போது கேட்கப்பட்டிருக்கு. அதை அடிப்படையா வச்சு நிகழ்ச்சிக்கான அவங்க சம்பளத்தை இறுதி செய்ததா சொல்றாங்க. அதேபோல முந்தைய எல்லா சீசன்களையும் ஒப்பிடறப்ப இந்த சீசனில் சம்பளம் குறைவுதான்னு தெரியுது’ என்கின்றனர் விவரமறிந்தோர்..

அதேநேரம் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நிகழ்ச்சிக்குள் சென்றவர்களுக்கு கொஞ்சம் அதிகமாகப் பேசப்பட்டிருப்ப‌தாகத் தெரிய வருகிறது.

சரி, இந்த சீசனில் யார் யாருக்கு எவ்வளவு ஊதியம் எனப் பார்க்கலாமா?

கானா பாடகர் வினோத் மற்றும் நிகழ்ச்சியில் அதிகம் கெட்ட வார்த்தைகள் பேசி எவிக்ட் ஆன கலையரசன் இருவருக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.8,000.

VJ Parvathy

கனி, எப்.ஜே., துஷார், ஆதிரை ஆகியோருக்கு ஒரு நாளுக்கு ரூ.10,000 என்கிறார்கள். இவர்களில் துஷார், ஆதிரை இருவரும் எவிக் ஆகி விட்டனர்.

அரோரா சிங்க்ளேர், வியானா இருவருக்கும் எனக் ரூ.12,000 கூறப்படுகிறது.

பிரவீன் காந்தி, அப்சரா, பிரவீன், சபரி, கமருதீன், திவாகர் ஆகியோருக்கு ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை என்கின்றனர். இவர்களில் பிரவீன், பிரவீன் காந்தி, அப்சரா மூவரும் வெளியேறி விட்டனர்.

வி.ஜே. பார்வதிக்கு அதிகபட்சமாக ரூ.20,000 என்கிறார்கள்.

divya ganesh

வைல்டு கார்டு என்ட்ரி மூலம் சென்ற சான்ட்ரா, பிரஜின், திவ்யா கணேஷ், அமித் பார்கவ் ஆகியோருக்கு நாளொன்றூக்கு ரூ.30,000 வரை பேசப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *