பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது.
கடந்த வாரம் நடத்த பணப்பெட்டி 2.0 டாஸ்க்கில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து சென்றார்.
தவிர சாண்ட்ரா எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார்.
டாப்-4 போட்டியாளர்களாக அரோரா, விக்ரம், சபரி, திவ்யா இருக்கின்றனர்.

வெளியேறிய போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் சென்றிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் புரொமோவில் சாண்ட்ரா பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
அப்போது பிரஜினிடம் பேசிய சாண்ட்ரா, ” இந்த 20 நாட்கள்ள நீங்க எனக்கு எவ்வளவு முக்கியம்’னு புரிஞ்சுக்கிட்டேன்” என்று எமோஷனலாக பேசுகிறார்.
தொடர்ந்து “ரம்யா நீ பார்த்தது தப்பு. நான் உன்னைப் பத்தி அப்படி சொல்லவே இல்ல. என் குழந்தைங்க மேல சத்தியமா சொல்றேன்” என்று சாண்ட்ரா சொல்கிறார்.

“என்கிட்ட வீடியோ இருக்கு நான் காட்டுறேன். நீங்க என்ன பாம்பு’ன்னு சொன்னது, நம்பக்கூடாதுன்னு சொன்னது இருக்கு காட்டுறேன்” என ரம்யா சாண்ட்ராவிற்கு பதிலளிக்கிறார்.