எதிர்பாராததை எதிர்பாருங்கள்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ஒரு பிக்பாஸ் சீசனில் இந்த வாசகம் ரொம்பவே பிரலமானது.
இப்போது உண்மையிலேயே எதிர்பாராததுதான் நடந்திருக்கிறது.
சுமார் 90 நாட்கள் வரை அந்த வீட்டுக்குள் கன்டென்ட் தருபவர்களாக இருந்து, வலுவான போட்டியாளர்களாகத் திகழ்ந்ததால், டாப் 5 பேர்களில் இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரெட் கார்டு கொடுத்து அதிரடியாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் விஜே பார்வதி, கமருதீன் இருவரும்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் எவிக்ட் ஆகி வெளியேறும்போது, நினைவுப் பரிசு கொடுத்து, சக போட்டியாளர்கள் கண்ணீருடன் விடை தர, தொகுப்பாளர் கூப்பிட்டுப் பேசி பயண வீடியோவெல்லாம் போட்டு அனுப்புவார்கள்.
ஆனால் யாராவது ரெட் கார்டு வாங்கி வெளியேறினால், இந்த நடைமுறைகள் கிடையாது.
பார்வதியும் கமருதீனும் வெளியேறிய போது இதுதான் நடந்தது.
சரி, இப்படி வெளியேறுபவர்களுக்கு நிகழ்ச்சியில் இருந்த நாட்கள் வரைக்கும் சம்பளமாவது கிடைக்குமா?
பெயர் குறிப்பிட விரும்பாத அந்தப் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர் இப்படிக் கூறினார்..
“‘சம்பளம்னு ஒரு பைசா கிடையாது. ஏன்னா நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தொடர்பா முதல்ல ஒரு அக்ரிமென்ட் போடுறாங்களே, அதுலயே இது பத்தி தெளிவாகக் குறிப்பிட்டுடுறாங்க.