BB Tamil 9: “வன்மம் வீழ்த்தப்பட்டது" – பார்வதியைக் கலாய்த்த கமருதீன்; ஆத்திரத்தில் விஜே பார்வதி

Spread the love

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 85 நாள்களைக் கடந்துவிட்டது.

கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறிருக்கின்றனர்.

இன்று வெளியான முதல் புரொமோவில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கை விக்ரம் வாசிக்கிறார்.

 BB Tamil 9
BB Tamil 9

அந்த அறிவிப்பில், நடுவில் இருக்கும் பெட்டியில் பந்துகள் இருக்கும். அதில் வெள்ளைப் பந்துகள், கருப்புப் பந்துகள் இரண்டு கோல்டன் நிறப் பந்துகள் இருக்கும். எடுக்கும் பந்தை மாற்றக்கூடாது. போட்டியாளர்கள் மற்றவர் எடுக்கும் பந்துகளின் பாஸ்கெட்டிலிருந்து பந்துகளை எடுக்கலாம்.

இறுதி பஸ்ஸர் அடிக்கும்போது உங்களிடம் கருப்புப் பந்து இருந்தால் அவுட். ஒவ்வொரு போட்டியாளரும் ஆக்ரோஷமாக விளையாடும் காட்சி ஒளிபரப்பப்படுகிறது.

பார்வதி, வினோத் பாஸ்கெட்டிலிருந்து பந்தை எடுக்க முயல்கிறார். திவ்யா பந்துகளைப் பிடிங்கிச் செல்லும் காட்சியும் இடம்பெற்றிருக்கிறது. இறுதியில் பார்வதி, கமருதீனிடம், “கேவலமா இருக்கு உன் கேம்… நீ ரொம்ப நல்லவனோ… நீ என்ன ஹீரோவா நான்தான் வில்லியா” எனச் சண்டையிடுகிறார்.

கமருதீன் சிரித்துக்கொண்டே, “வன்மம் வீழ்த்தப்பட்டது எனப் பேசுகிறார். டிக்கெட் டூ ஃபினாலே பிக்பாஸ் நிகழ்ச்சியும் முக்கியமான அம்சம் என்பதால் யார் வெற்றிப்பெறப்போகிறார்கள் என்பது இன்று நிகழ்ச்சியில் தெரியவரும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *