“எனக்கு சபரி மேலதான் சந்தேகம். எதிர் டீம் ஆளுங்க மேல இருக்கற பாசத்தால டாஸ்க்கை விட்டுட்டாரு” என்று வினோத்தும் கம்ருதீனும் குற்றம் சாட்ட, சபரி அப்செட் ஆனார். “அடப்பாவிங்களா.. நைட்டு ஃபுல்லா தூங்காம காவல் காத்தேன்.. என்னைப் போய்..” என்று நொந்து போனார்.
‘தப்புன்னா பிக் பாஸ் சொல்ல மாட்டாரா?’ – பாருவை மடக்கிய விசே
பிரேக் முடிந்து திரும்பிய விசேவிடம் “ஆர் யூ ஓகே பேபி..? என்று பார்வையாளர்களில் ஒருவர் கேட்க “நாட் ஓகே பேபி” என்று குறும்பாக பதிலளித்தார் விசே. முதலில் பாருவை கேள்வி கேட்ட விசே “நான் எதையெல்லாம் கேட்கணும்ன்னு நீங்க லிஸ்ட் போடறீங்க.. இல்லையா?” என்று கேட்க “அது வந்து சும்மா வழிநடத்துதல்..” என்று பாரு அசடு வழிய, “பெண்டிங் லிஸ்ட் ஏதாச்சும் இருக்கா. சொல்லுங்க” என்றார் விசே சர்காஸமாக.
ஆக்டிவிட்டி ஏரியா கதவை விக்ரம் மூடியது தொடர்பான புகாரை மறுபடியும் தூசுதட்டி பாரு சொல்ல “அது தப்புன்னா பிக் பாஸ் சொல்லியிருக்க மாட்டாரா.. நேத்து உங்களுக்கு ஆதரவா பேசினப்ப நல்லா இருந்துதுல்ல.” என்று பாருவை உட்காரவைத்தார் விசே.
கம்ருதீனின் ‘ரெமோ’ குரலிலேயே அவரை விசே பாராட்டியது சுவாரசியமான குறும்பு. வீட்டு ‘தல’ ரம்யா பேசிக் கொண்டிருக்கும் போது குறுக்கிட்டு கத்திக் கொண்டிருந்த பாருவை விமர்சித்த விசே ‘ஒரு அதிகாரத்தை எதுக்காக தரோம். அவர் பேச்சை கேட்பாங்கன்னுதானே..” என்று கேட்க, வழக்கம்போல் பல் கடித்தபடி சிரித்து சமாளித்தார் பாரு.
கம்ருதீனை அவமரியாதையாக பேசிய ரம்யாவிற்கு ஒரு குட்டு. ரம்யாவிடம் முரட்டுத்தனமாக பேசிய கம்முவிற்கும் ஒரு குட்டு. சண்டைபோட்ட திவ்யாவிற்கு ஒரு குட்டு. “உங்களுக்கு கோபமா சண்டை போடத் தெரியுது. பழிவாங்கத் தெரியுது. ஆனா ஆட்டத்துல ஒண்ணுமே காணோம்” என்று சலித்துக்கொண்டார் விசே.