நாமினேஷன் வரிசையில் மீண்டும் பாரு
வீட்டு ‘தல’யான கம்மு, நாள் பூராவும் சொந்த பிரச்சினையைப் பற்றியே அனத்திக் கொண்டிருப்பதால் “இந்த வீட்ல தலன்னு ஒருத்தர் இருப்பாரே.. மத்தவங்க ஒழுங்கா நடந்துக்கறதை பார்க்கறது அவர் பொறுப்புதானே..” என்று பிக் பாஸ் வலிக்காமல் ஜாலியாக நினைவுப்படுத்தினார்.
கம்மு – பாரு உரையாடல் மீண்டும் தொடர்ந்தது. (வேற கன்டென்ட் இல்ல பாஸ்!) “யப்பா.. சாமி.. உன் மேல தப்பே இல்ல. நான்தான் தெரியாம சொல்லிட்டேன். தப்பு பூரா என்னதுதான். தவறான வார்த்தையை தவறான சமயத்துல சொல்லிட்டேன். மன்னிச்சுக்கோ..” என்று பாரு பரிபூர்ண சரணாகதி அடைய “அப்படி வா.. யப்பாடி.. இப்பத்தான் எனக்கு நிம்மதியாச்சு.. உனக்கு clarify ஆச்சு. இனிமே பாரு கூட கனெக்ட் ஆக முடியாது” என்று பெருமூச்சு விட்டார் கம்மு.
பாருவின் அம்மா உள்ளே வந்து தன்னை லாக் செய்வதற்கு முன்பாக, இந்தக் கேஸில் இருந்து வெளியேறி விடுவதற்காக கம்மு செய்த புத்திசாலித்தனமான தந்திரமாக இது தெரிகிறது. கூடுதலாக அவருடைய இமேஜூம் பார்வையாளர்களிடம் கெடாது. நல்ல கேம் கம்மு!
ஒருவழியாக இந்த விஷயத்தில் இருந்து அடுத்ததற்கு நகர்ந்தார் பிக் பாஸ். நாமினேஷன். ‘சான்ட்ராவின் புலம்பல் தாங்கலை. அவங்களால இனி கேமிற்கு எந்தவொரு சுவாரசியத்தையும் தராது” என்கிற நிதர்சன உண்மையை காரணமாக சொன்னார் விக்ரம். இதையே கனியும் அரோவும் வேறு வேறு வார்த்தைகளில் சொன்னார்கள். பாருவிற்கும் சில குத்துகள் விழுந்தன.
பாட்டுப் பாடிய விஷயத்தில் கனி, பாருவை குற்றம் சாட்டிய சான்ட்ரா, அடுத்ததாக விக்ரமையும் வரிசையில் நிறுத்தி “அவர் பாட்டு பாடியது எனக்கு ஹர்ட் ஆச்சு” என்கிற காரணத்தைச் சொல்லி நாமினேட் செய்தார். (முடியல!).
ஆக.. இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் கனி, சபரி, திவ்யா, வினோத், அமித், சுபிக்ஷா, அரோரா, சான்ட்ரா, விக்ரம் மற்றும்……………. பாரு.. “பாவிகளா..இந்த முறையும் விட்டு வைக்கலையா?” என்கிற பல்லவியைப் பாடினார் பாரு.