இந்த வார எவிக்ஷனுக்கான டிஸ்கஷன் வழக்கம் போல நடந்திருக்கிறது. இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடந்திருந்தது.
அமித் பார்கவ், அரோரா, திவ்யா கணேஷ், கனி, கெமி, பிரஜின், ரம்யா ஜோ, சபரி, சாண்ட்ரா, சுபிக்ஷா, விக்ரம், வியானா, வி.ஜே. பார்வதி என 13 பேர் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த வாரம் 13 பேர் நாமினேஷன் லிஸ்டில் இருப்பதால் யார் வெளியேறுவார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
பார்வையாளர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் இந்த வாரம் கெமி வெளியேறியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
இதுவரை பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன் ராஜ், திவாகர் என 7 பேர் எவிக்ட் ஆகியிருக்கிறார்கள்.
பிக் பாஸ் வீடு செட் ஆகாததால் நந்தினி முதல் வாரத்தில் அவராகவே வெளியேறினார். ஓட்டுகளின் அடிப்படையில் குறைவாக வாக்குகளைப் பெற்ற கெமி இந்த வாரம் எவிக்ட் ஆகியிருக்கிறார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.