Bigg Boss Tamil 9 : டைட்டில் வெல்வாரா அரோரா? ஒர்க் அவுட ஆகுமா எழுத்து ஜோதிடம்?

Spread the love

முந்தைய சீசன்களின் போதே இவர்கள் பேசினார்கள்தான். அது காக்காய் உட்கார பணம் பழம் விழுந்த கதையா தெரியவில்லை, சில சமயங்களில் நடந்து விட இதோ இந்த சீசனிலும் கிளம்பி விட்டார்கள்.

‘அதாவது முதல் சீசனிலிருந்து கடந்த சீசன் வரை ஏ, ஆர், எம் ஆகிய இந்த மூன்று ஆங்கில எழுத்துக்களில் பெயர் தொடங்குபவர்களே டைட்டில் வாங்கியிருக்கிறார்கள்.

அந்த வரிசைப்படி பார்த்தால் இந்த சீசனில் டாப் நான்கு பேரில் அரோரா மட்டுமே ஏ எழுத்தைக் கொண்டவர். நிகழ்ச்சியிலும் பாசிடிவிடியைத்தான் சம்பாதித்திருக்கிறார். எனவே அவர் நிச்சயம் டைட்டில் வெல்வார்’ என்பதே இவர்களது வாதமாக இருக்கிறது.

ஆரவ், ரித்விகா, முகேன், ஆரி, ராஜு, முகமது அசீம், அர்ச்சனா, முத்துக்குமரன் என முந்தைய போட்டியாளர்களின் பெயர்களை பார்க்கும் போது, அட ஆமால்ல என்கிறீர்களா…

இந்த எழுத்து ஜோதிடம் ஒர்க் அவுட் ஆகிறதா எனத் தெரிந்து கொள்ள ஒரு வாரம் பொறுத்திருப்போம்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *