அவரது பதிவில், “படம் மிகச் சிறப்பாக இருந்தது.
மாரி செல்வராஜ் ஒரு தலைசிறந்த திரைப்பட இயக்குநர்.
அவரது படைப்புகள் அழுத்தமானதாகவும், ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துபவையாகவும் உள்ளன.
துருவ் இந்தப் படத்தில் மிகவும் யதார்த்தமாக நடித்துள்ளார்; அதற்காக அவர் மிகுந்த கடின உழைப்பைச் செலுத்தியிருப்பார்.

துணை கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக தங்கள் பங்கை வெளிப்படுத்தினர். அனைவருக்கும் எனது பாராட்டுகளும், மேலும் பல வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துக்கள்.” என பாராட்டியுள்ளார்.