இசம்பவத்தின் எதிரொலியாய், உத்தர பிரதேச அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, கன்வார் புனித யாத்திரை செல்லும் வழிகளில் உள்ள அனைத்து உணவகங்களின் முகப்பிலும், அதன் உரிமையாளர்கள் தங்கள் பெயர்களை கட்டாயம் சுட்டிக்காட்டியிருக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, எச்சில்நீரை உமிழ்ந்து ரொட்டி மாவு தயாரித்த கடைக்காரருக்கு ஆதரவாக இந்தி நடிகர் சோனு சூட் கருத்து தெரிவித்திருப்பது விவாதப் பொருளாகியுள்ளது.
இச்சம்பவத்தை ராமாயணத்தில் பகவான் ஸ்ரீராமர், சபரி வாயால் கடித்துப் போட்ட பழங்களை உணவாக்கிக் கொண்ட சம்பவத்துடன் ஒப்பிட்டுள்ளார் சோனு சூட்.
தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ”பகவான் ராமர் சபரியால் வழங்கப்பட்ட கனிகளை உட்கொள்ளும்போது, தன்னால் அந்த ரொட்டிகளை(எச்சில் உமிழ்ந்த மாவால் தயாரிக்கப்பட்ட ரொட்டிகளை) ஏன் சாப்பிட முடியாது? வன்முறையை அகிம்சையால் வீழ்த்த முடியும் சகோதரரே, மனிதாபிமானம் இருக்க வேண்டும். ஜெய் ஸ்ரீராம்” எனப் பதிவிட்டுள்ளார் சோனு சூட்.