பாராளுமன்றத்தில் இன்று (23ந்தேதி) மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
எதிர்கட்சியினர் குற்றசாட்டு
விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு இருந்ததாலும் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள். பட்ஜெட்டையும் விமர்சித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கமல்
மேலும் தமிழகத்திற்கு எந்த திட்டமும் இல்லை மற்றும் ரெயில்வே தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசின் பட்ஜெட்டை நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல் விமர்சித்து உள்ளார்.
அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில் “NDA பட்ஜெட்டுக்கு வாழ்த்துகள், விரைவில் INDIA பட்ஜெட் இருக்கும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.