பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேத்கர் மீது 4 பிரிவுகளில் வழக்கு

Dinamani2f2024 072f1cbe8498 25fa 4b85 8ce3 94dcf1a57e092fpuja20khedkar.jpg
Spread the love

மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தை ஏமாற்றியதாக பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேத்கர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம், பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேத்கர் மீது தில்லியில் உள்ள குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தது.

இந்த புகாரைத்தொடர்ந்து பூஜா கேத்கர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடி, ஏமாற்றுதல், ஐடி சட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4 பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணிகள் தோ்வில் தோ்ச்சி பெற்று பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக உள்ள பூஜா மனோரமா திலீப் கேத்கா் மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான (ஓபிசி) இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளானாா்.

புணேவில் உதவி ஆட்சியராக இருந்த அவா், பதவியை துஷ்பிரயோகம் செய்து பிறரை மிரட்டியது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய நிலையில், வாசிம் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

அவரை பற்றிய முழு விவரங்களை ஆய்வுசெய்ய பணியாளா்துறையின் கூடுதல் செயலா் தலைமையில் ஒரு நபா் குழு அமைக்கப்பட்டு, இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கையை சமா்ப்பிக்க மத்திய பணியாளா் அமைச்சகம் உத்தரவிட்டது.

பூஜா கேத்கா் முறைகேடு செய்ததாக நிரூபிக்கப்பட்டால் அவா் பணி நீக்கம் செய்யப்படலாம்; மேலும் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிா்கொள்ளவும் நேரிடும் என விசாரணையைத் தொடங்கிய குழு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *