CBSE: பிளஸ் டூ தேர்வில் திடீர் மாற்றங்கள்: கம்ப்யூட்டர் மூலம் `ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்’ – இது சரியா?

Spread the love

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ்டூ தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்தியாவில் சுமார் 23,806 சிபிஎஸ்இ சீனியர் செகண்டரி பள்ளிகள் உள்ளன. 18 லட்சத்து 49,000 மாணவர்கள் பிளஸ்டூ தேர்வை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆண்டு முதல் இரண்டு முக்கிய மாற்றங்களை கடைசி நேரத்தில் செய்திருக்கிறது சிபிஎஸ்இ நிர்வாகம். பத்தாம் வகுப்பைப் பொறுத்தவரை ஏதேனும் மூன்று பாடங்களில் மறுதேர்வு எழுதலாம். இரண்டில் எதில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்களோ அது இறுதியாக எடுத்துக்கொள்ளப்படும்.

ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் –

பிளஸ்டூ-வைப் பொறுத்தவரை இந்தாண்டு முதல் ஆசிரியர்கள் விடைத்தாளை நேரடியாகத் திருத்த மாட்டார்கள். ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்” முறையில், விடைத்தாளை ஸ்கேன் செய்து கம்ப்யூட்டரில் ஏற்றி திருத்துவார்கள். இப்படித் திருத்துவதால் மதிப்பெண்களை கூட்டுவதில் தவறு நேராது என்றும், சில விடைகள் திருத்தாமல் விடுபட்டுப்போவது நடக்காது என்றும் சிபிஎஸ்இ நிர்வாகம் கூறுகிறது. புதிய கல்விக் கொள்கைப்படி, தேர்வு தொடர்பான மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காகவே இந்த மாற்றங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

உண்மையில் இது மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்குமா?

கல்வியாளர் நெடுஞ்செழியனிடம் கேட்டோம். “ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்’ முறையைக் கொண்டு வந்ததற்கு பல காரணங்களை முன்வைக்கிறது சிபிஎஸ்இ. ‘விடைத்தாள் திருத்த நிறைய சென்டர்கள் உருவாக்க வேண்டியுள்ளது. ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்வது சிரமமாக இருக்கிறது. நிறைய ஆசிரியர்களை இந்தப்பணியில் ஈடுபடுத்த வேண்டியுள்ளது’ என்றெல்லாம் சிபிஎஸ்இ தரப்பில் சொல்லப்படுகிறது.

கல்வியாளர் நெடுஞ்செழியன்

கல்வியாளர் நெடுஞ்செழியன்

விடைத்தாளை ஸ்கேன் செய்து சர்வரில் ஏற்றி விடுவார்கள். இந்தியாவில் எங்கே இருந்தாலும் ஆசிரியர்கள் அதைத் திருத்தலாம். தமிழக மாணவர்களின் விடைத்தாளை உத்தர பிரதேசத்தில் உள்ளவர் திருத்தலாம். குஜராத் மாணவன் எழுதிய பேப்பரை தமிழக ஆசிரியர் திருத்தலாம். ‘சாதாரணமாக பேப்பர் திருத்துவதைப் போலதான் இது, எந்தக் குழப்பமும் இதில் வரவாய்ப்பில்லை’ என்று சிபிஎஸ்இ தரப்பில் சொல்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *