மத்திய அரசின் 2024 ஜூன் மாதம் வரையிலான மாதாந்திர கணக்கு ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மாதாந்திர கணக்கு
மத்திய அரசு 2024 ஜூன் மாதம் வரை ரூ.8,34,197 கோடியை (மொத்த வரவுகளில் 2024-25 பட்ஜெட் மதிப்பீட்டில் 27.1%) பெற்றுள்ளது. இதில் ரூ.5,49,633 கோடி வரி வருவாய், ரூ.2,80,044 கோடி வரி அல்லாத வருவாய் மற்றும் ரூ.4,520 கோடி கடன் அல்லாத மூலதன வரவுகள் அடங்கும்.
இந்த காலகட்டம் வரை மத்திய அரசால் வரிகளின் பங்காக ரூ.2,79,502 கோடி மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட ரூ.42,942 கோடி அதிகமாகும்.
மத்திய அரசின் மொத்த செலவினம் ரூ.9,69,909 கோடியாகும் (2024-25 பட்ஜெட்டில் 20.4%). இதில் ரூ.7,88,858 கோடி வருவாய் கணக்கிலும், ரூ.1,81,051 கோடி மூலதனக் கணக்கிலும் உள்ளது. மொத்த வருவாய் செலவினங்களில், ரூ.2,64,052 கோடி வட்டி செலுத்துவதற்காகவும், ரூ.90,174 கோடி முக்கிய மானியங்களுக்காகவும் உள்ளது.