பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஆகஸ்ட் 31) பகல் 12:30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் 3 வந்தே பாரத் ரயில்களைக் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
சென்னை – நாகர்கோவில்
பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் உற்பத்தி செய்வோம்), தற்சார்பு இந்தியா ஆகிய தொலைநோக்கு பார்வைகளை நனவாக்கும் வகையில், அதிநவீன வந்தே பாரத் விரைவு ரயில்கள் மூன்று வழித்தடங்களில் இணைப்பை மேம்படுத்தும். மீரட் – லக்னோ, மதுரை – பெங்களூரு, சென்னை – நாகர்கோவில் ஆகியவை அந்த மூன்று வழித்தடங்களாகும்.
வந்தே பாரத் விரைவு ரயில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:50 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். மறு பயணத்தில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 2:20 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 11:00 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். 16 பெட்டிகள் கொண்டது இந்த ரயிலில்.
இந்த ரயில் தாம்பரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட பல முக்கிய நிலையங்களில் நிறுத்தப்படும். ரயில் நேரம் :சென்னை- காலை 5.00 தாம்பரம்- காலை 5.23 மணி: திருச்சி-காலை 8.55 திண்டுக்கல்- காலை 9.53 மணி,மதுரை-காலை 10.38மணி ,கோவில்பட்டி- காலை 11.35 மணி, திருநெல்வேலி- 12.30 மணி நாகர்கோவில- மதியம் 1.50 மணி.
கட்டணம்
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்குப் பயணம் செய்ய விரும்பும் பயணிகளுக்கு இருக்கை வகுப்பு டிக்கெட்டுக்கான கட்டணம் ரூ.1,650 முதல் ரூ. 1,700 வரை இருக்கும். வந்தே பாரத் ரெயில் பயணிகளுக்கு விரைவான மற்றும் வசதியான பயணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
பொன்.மாணிக்கவேலுக்கு நிம்மதி: முன்ஜாமின் வழங்கியது ஐகோர்ட் கிளை
மீரட் – லக்னோ இடையேயான வந்தே பாரத் ரயில், இரு நகரங்களுக்கும் இடையிலான தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும்போது பயணிகளுக்கு சுமார் 1 மணி நேரத்தை மிச்சப்படுத்த உதவும். இதேபோல், சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் 2 மணி நேரத்தையும், மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் 1 மணி நேரம் 30 நிமிடத்தையும் பயணத்தை மிச்சப்படுத்தும்.
இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள் இப்பகுதி மக்களுக்கு வேகமாகவும் வசதியுடனும் பயணிக்க உலகத்தரம் வாய்ந்த வழிகளை வழங்கும். மேலும் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் இந்த ரயில்கள் இணைப்பை மேம்படுத்தும். இந்த வந்தே பாரத் விரைவு ரயில்கள், வழக்கமான ரயில் பயணிகள், தொழில் துறையினர், வணிகத் துறையினர், மாணவர் சமூகத்தினர் உள்ளிட்ட பல பிரிவினரின் தேவைகளைப் பெருமளவில் பூர்த்தி செய்யும் வகையில் புதிய தரத்திலான ரயில் சேவையை வழங்கும்.
கோட் – ரன்னிங் டைம் 3 மணி நேரம் ஏன்? பதிலளித்த வெங்கட் பிரபு!