சென்னை:
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது. இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நானை மின கன மழை கொட்டும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்கனவே நேற்று(14ந்தேதி) இரவு தொடங்கிய மழை இன்று 15ந்தேதி வரை முடிவு இல்லாமல் வெளுத்து வாங்கி வருகிறது. காலையில் மழை குறைந்து இருந்து நிலையில் பின்னர் பலத்த மழையாக கொட்டி வருகிறது. இதனால் கோயம்பேடு,புரசை வாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, கொரட்டூர், கொளத்தூர், தாம்பரம், பல்லாவரம், வேளச்சேரி, தரமணி, சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை,மதுரவாயல், மயிலாப்பூர், அண்ணாநகர், கே.கே.நகர், வில்லிவாக்கம்,ஆவடி, பெரம்பூர்,திருவொற்றியூர், மணலி மற்றும் வடசென்னை பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தண்ணணீர் ஆறுபோல் சாலையில் ஓடுகிறது. தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளன. இதனால் மாடியில் பொதுமக்கள் தஞ்சம் அடைந்து உள்ளனர். வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்து வருகிறார்கள். வேளச்சேரி, ராயபுரத்தில் உள்ள மேம்பாலத்தில் கார்களை வரிசையாக நிறுத்தி வைத்து உள்ளனர்.
கனமழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளுக்கும் நநீர் வத்து அதிகரித்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் வேகமாக நிறைந்து வருகின்றன. புழல் ஏரிக்கு காலையில் வெறும் 270 கனஅடியாக இருந்த நீர் வரத்து மாலையில் 4 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நீ£ங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் 25 புலம் பெயர் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நாளைதான் அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து உள்ளதால் சென்னை மக்கள் கலக்கத்தில் உள்ளனர். வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த முதல் நாளே கதிகலங்கி உள்ளனர். மழை வெள்ளத்தை சமாளிக்க என்ன செய்வது என்று தவிப்பில் உள்ளனர்.
மேலும் மழை எச்சரிக்கையை அடுத்து மளிகைகடை மற்றும் காய்கறி கடைகளில் பொதுமக்கள் பொருட்களை மொத்தமாக வாங்கியதால் அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. காய்கறிகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. பெரியமேட்டில் மின்சாரம் தாக்கியதில் கடைநடத்தி வந்த வடமாநிலத்தை சேர்ந்த அகமது சையது என்பவர் பலியானார். வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலணியில் மழை வெள்ளத்தில் வீடுகளில் சிக்கியவர்களை படகுகளில் மீட்டனர். நாளையும் இதே மழை நீடித்தால் அனைத்து இடங்களிலும் உள்ளவர்களையும் படகுகளில் தான் மீட்கவேண்டிய நிலை ஏற்படும்.
சென்னையில் பல ஆண்டுகளாக மழை வெள்ள பாதிப்பை பார்த்தும் இன்னும் எந்த பாடத்தையும் திராவிட அரசுகள் கற்கவில்லை. மழைநீர் கால்வாய்களில் போதிய இணைப்பு இல்லாததே முதல் நாள் மழையிலேயே சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
எனினும் அரசு நிவார முகாம்கள், படகுகளை தயார் செய்து தங்களது வழக்கமான பணியை தீவிரப்படுத்தி உள்ளது. எப்போதுதான் இந்த மழை வெள்ள பிரச்சினைக்கு முடிவு வருமோ என்று நொந்தபடி பொதுமக்கள் வரும் மழையை அச்சத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்…