Chhaava திரைப்படம் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் திரைப்படம் என்று சமீபத்திய பேட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியிருந்தார்.
இதற்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்தன. சிலர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
அதில், “அன்பு நண்பர்களே… இசை எனக்கு எப்போதுமே கலாச்சாரத்தை இணைக்கும், கொண்டாடும், மரியாதை செய்யும் பாதையாக இருந்துள்ளது.
இந்தியா என்னுடைய இன்ஸ்பிரேஷன். அது என்னுடைய ஆசிரியர், வீடு.
சில நேரங்களில் நாம் சொல்வது தவறாக புரிந்து கொள்ளப்படும் என்பது எனக்கு புரிகிறது.
ஆனால், நான் எப்போதுமே இசை மூலம் மரியாதை செய்யவும், முன்னேற்றவும், சேவை செய்யவும் தான் நினைக்கிறேன்.