"Chhaava பிரிவினையைப் பேசும் படம்தான்; ஆனால்" – 'சாவா' படத்திற்கு இசையமைத்தது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

Spread the love

சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘சாவா’.

லக்ஸ்மன் உடேகர் இயக்கிய இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்திருந்தார்.

'சாவா'
‘சாவா’

நடிகை ராஷ்மிகா மந்தனா, சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தன.

இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ஏ.ஆர். ரஹ்மான் இதுதொடர்பாகப் பேசியிருக்கிறார்.

“ஒரு வரலாற்றுப் படத்திற்கு இசையமைக்கும்போது, அந்தக் காலகட்டத்தின் ஆன்மாவைச் சிதைக்காமல், அதே சமயம் இன்றைய தலைமுறைக்கும் புரியும் வகையில் இசையமைக்க வேண்டும்.

இந்தப் படத்தின் இசை என்பது வெறும் பாடல்கள் மட்டுமல்ல, அது சம்பாஜி மகாராஜின் வீரத்தையும் தியாகத்தையும் பிரதிபலிக்கும் ஒரு கருவி. அதை உணர்வுப்பூர்வமாக அணுகியிருந்தேன்.

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

விமர்சனங்கள் எப்போதும் வரும். அதுதான் கலைஞனைச் செதுக்கும். ஆனால், ஒரு படைப்பை முழுமையாகப் பார்த்த பிறகு அதன் பின்னணியைப் புரிந்துகொண்டால் அந்த இசையின் நோக்கம் புரியும்.

‘சாவா’ பிரிவினையைப் பேசும் படம்தான். அப்படம் பிரிவினையை முன்வைத்து பணம் சம்பாதித்தது என்றுதான் நினைக்கிறேன். ஆனால், ‘வீரத்தைக் காட்டுவது’தான் அப்படத்தின் மையக்கருவாக நான் பார்க்கிறேன்.

‘இப்படத்திற்கு நான் ஏன் தேவை?’ என அதன் இயக்குநரிடம் கேட்டேன். ‘நீங்கள் மட்டும்தான் இப்படத்திற்குத் தேவை’ என்று சொன்னார்” என ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *