வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறி தற்போது இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இதையடுத்து வங்கதேச நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் முகம்மது ஷஹாபுதீன் அறிவித்தார்.
தொடர்ந்து, வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணா் முகமது யூனுஸ் ஆக. 8 அன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் முகமது ஷஹாபுதீன் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.