ஆளுநர் மாளிகை பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை – ஸ்டாலின்

Spread the love

சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநரின் மாளிகையான ‛ராஜ்பவன்” பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையின் பெயரை ‛மக்கள் பவன்’ என மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி விருப்பம் தெரிவித்திருந்தார். இதனை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்ற நிலையில், பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் உள்ள ‛ராஜ் பவன்’ பெயர்கள் ‛லோக் பவன்’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை
ஆளுநர் மாளிகை

லோக்பவன் என்பதற்கு மக்கள் பவன் என்று பொருள். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை! சட்டமன்றம் = மக்கள் மன்றம்! சட்டமன்றத்தை மதிக்காதவர்கள், “மக்கள் மாளிகை” எனப் பெயர் மாற்றுவது கண் துடைப்பா? மக்களாட்சித் தத்துவத்தின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற இறையாண்மையுள்ள சட்டமன்றத்தையும் மதிப்பதுதான் இப்போதைய தேவை! சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *