பருவநிலை மாற்றம் என்பது மனிதகுலத்தை பாதிக்கும் டைம் பாம்- என்று குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
பருவநிலை மாற்ற உச்சிமாநாடு
உயிரி எரிசக்தி குறித்த நான்காவது சர்வதேச பருவநிலை மாற்ற உச்சிமாநாட்டின் நிறைவு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:&
மனிதன் வாழ பூமியை தவிர வேறு எந்த கிரகமும் இல்லை. இதனை பாதுகாக்க வேண்டும். காலநிலை மாற்றத்தின் காரணமாக அதிக வறட்சி,பயங்கரமான காட்டுத் தீ, எதிர்பாராத புயல்கள் வருகின்றன.இந்த மாற்றங்கள் மக்களை ஆபத்தில் தள்ளுவது மட்டுமின்றி பல்லுயிர், உணவு பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது. இயற்கை வளங்கள், விவசாயத்தில் குறிப்பிட்ட பாதிப்பை ஏற்படுத்து கிறது.
கூட்டாக நடவடிக்கை
தாயின் பெயரில் ஒரு மரக்கன்று” என்பது உணர்ச்சிபூர்வமானது மட்டுமின்றி ஒரு புரட்சிகரமான நடவடிக்கை .பருவநிலை மாற்றம் என்பது நலிந்த பிரிவினரைத் தான் பெரிதும் பாதிக்கும் என்பதால் பருவநிலை நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
நல்லிணக்கத்துடன், இயற்கையுடன் இணைந்து வாழ்வது பாரதத்தின் நாகரீக வெளிப்பாடு.உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி செயல்பாட்டுக்கும், நீடித்த எரிசக்தி தொடர்பான உலகளாவிய தலைமைத்துவத்தை இந்தியா ஏற்று உள்ளது. எனவே பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அனைவரும் கூட்டாக நடவடிக்கை செயல்ப வேண்டும்.பருவநிலை மாற்றம் என்பது மனிதகுலத்தை பாதிக்கும் டைம் பாம் போன்றது.
உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி, பசுமை ஹைட்ரஜன் மிஷன் மற்றும் சர்வதேச சோலார் போன்றவை இந்தியா எடுத்த முன்னோடி நடவடிக்கைகள்.நவீன உயிரி ஆற்றல் சுத்தமான எரிபொருளை வழங்குவது மட்டுமல்லாமல், மாசுபாட்டைத் தணிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், இறக்குமதி கட்டணங்களைக் குறைக்கவும், உள்ளூர் வேலைகளை உருவாக்கவும் உதவுகிறது.
எல்லைகளைக் கடந்து
காலநிலை மாற்றத்தின் தாக்கம் எல்லைகளைக் கடந்து எதிரொலிக்கிறது.இந்த அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கான கூட்டு நடவடிக்கைக்கு அரசுகள், கார்ப்பரேட் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். நாம் ஒற்றுமையாகச் இருக்க வேண்டும்.
நம்மால் முடிந்தவரை, அதிகபட்சமாக நமது ஆற்றலை, நமது திறனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் பேசினார்.
“உண்மைகளை மறைக்கவே என்கவுன்டர் நடந்ததாக பலருக்கும் சந்தேகம்” – கார்த்தி சிதம்பரம்