Last Updated:
நிதிஷ் குமார் 10ஆவது முறையாக பிகார் முதலமைச்சராக பதவியேற்றார். என்.டி.ஏ. கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாட்னாவில் விழா நடைபெற்றது.
பிகார் முதலமைச்சராக 10 ஆவது முறையாக பதவியேற்றாரன்.டி.ஏ. சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதிஷ் குமார், 10ஆவது முறையாக பிகார் முதலமைச்சராக இன்று பதவியேற்றார்.
நடந்து முடிந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஜே.டி.யு. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி 202 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைத்தது. தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டு, பாஜக 89 தொகுதிகளிலும், ஜேடியு 85 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பாஜக தனிப்பெரும் கட்சியாக வென்றுள்ள நிலையில், நிதிஷ் குமாருக்கு மீண்டும் முதலமைச்சர் பதவி வழங்கப்படுமா என்ற ஐயம் எழுந்தது.
இந்நிலையில், பட்னாவில் என்.டி.ஏ. சட்டமன்றக் குழுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிகார் பாஜக தலைவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் என்.டி.ஏ. சட்டமன்றக் குழுத் தலைவராக நிதிஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் மூலம் பிகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் 10ஆவது முறையாக இன்று பதவியேற்றார். தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற விழாவில் கவர்னர் ஆரிப் முகமது கான், நிதிஷ் குமாருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா ஆகியோர் பங்கேற்றனர்.
November 20, 2025 12:04 PM IST
