மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Dinamani2fimport2f20232f82f42foriginal2fmk Stalin New Edi 640.jpg
Spread the love

சென்னை:
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:

நிவாரணமோ தீர்வோ ஏற்படவில்லை

அண்மையில் இரண்டு மீனவர்கள் உயிரிழந்த நிலையில், மீனவர் பிரசனை தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சரை தமிழ்நாட்டிலிருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் சந்தித்ததை நினைவுகூர்ந்துள்ள முதல்வர், அதற்குப் பின்னரும் குறிப்பிடத்தக்க நிவாரணமோ தீர்வோ ஏற்படவில்லை என்று வருத்தத்தோடு குறிப்பிட்டுள்ளார்.

Fisher Boat
கோப்பு படம்

நமது மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சம்பவங்களால், மீனவக் குடும்பங்கள் மிகுந்த துயரங்களுக்கு ஆளாவதோடு, கடலோர மீனவ சமுதாயத்தினரிடையே அச்ச உணர்வும், அவர்களது வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மையும் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதல்வர், இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவ குடும்பங்களின் மன நம்பிக்கையை குலைத்து, பெருத்த நிதி சுமையை ஏற்படுத்தி, அவர்களது பாரம்பரிய மீன்பிடித் தொழிலை கடினமாக்கி உள்ளதாகவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தூதரக நடவடிக்கை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திடவும், இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நிரந்தரத் தீர்வை ஏற்படுத்திடவும் வலுவான தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும் எனக் குறிப்பிட்டுள்ள முதல்வர், கடலோர மீனவ சமுதாயத்தினரின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவித்து, தாயகத்திற்கு அழைத்து வருவதை உறுதி செய்திட வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

அவசர நிலைகாலம் சுதந்திரத்திற்கு பிந்தைய மோசமான இருண்ட காலம்- ஜக்தீப் தன்கர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *