நாட்டுக்கு மிகப் பெரிய மீட்பு தேவை-இங்கிலாந்து பிரதமர்

281548b1 68e6 40bc 9078 C83ec67b30ea
Spread the love

இங்கிலாந்தில் நேற்று (ஜூலை 4) நடைபெற்ற பிரதமர் பதவிக்கான தேர்தல் ஒட்டுப்பதிவு எண்ணிக்கை உடனடியாக இன்று தொடங்கியது. இதில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

64e7799c 6d5b 4c45 81c8 Eabd4051814e

கீர் ஸ்டார்மர்

இதன் மூலம் பிரிட்டனில் கடந்த 14 ஆண்டுகளாக நடந்து வந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. மொத்தமுள்ள 650 இடங்களில் தொழிலாளர் கட்சி 412 இடங்களில் வெற்றி பெற்றது. ரிஷிசுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களில் மட்டுமே வென்றது. தொழிலாளர் கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மர் இங்கிலாந்தின் புதிய பிரதமராக உடனடியாக இன்று பதவி ஏற்றார்.முன்னதாக அவர் இங்கிலாந்து மன்னரை சந்தித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து பிரதமராக பதவி ஏற்றகீர் ஸ்டார்மர் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

Britain Election 81986

நாட்டுக்கே முன்னுரிமை

ரிஷி சுனக்குக்கு நன்றி. நாட்டின் முதல் பிரிட்டிஷ் ஆசிய பிரதமராக இருந்த அவரின் சாதனை மகத்தானது. அதற்கு அதிகப்படியான ஒரு கூட்டு முயற்சி தேவை. அதனை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது.தற்போது மாற்றத்துக்கும், அரசியலானது சேவைக்கு திரும்புவதற்கும் நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர்.
நீங்கள் தொழிலாளர் கட்சிக்கு வாக்களித்திருந்தாலும் இல்லாவிட்டாலும், குறிப்பாக நீங்கள் வாக்களிக்கவில்லை என்றாலும் எனது அரசு உங்களுக்கு சேவை செய்யும் என்று நான் நேரடியாக உங்களுக்குச் சொல்கிறேன். அரசியல் நன்மைகள் செய்வதற்கான சக்தி. நாங்கள் அதனை உங்களுக்கு காட்டுவோம். நாங்கள் தொழிலாளர் கட்சியை சேவைக்கு திரும்புவதற்காக மாற்றியுள்ளோம். அப்படிதான் நாங்கள் ஆட்சி செய்ய உள்ளோம்.

நாட்டுக்கு மிகப் பெரிய மீட்பு தேவை

F20f9d4f 4760 4242 826c 1efc111c8616

நாட்டுக்கே முன்னுரிமை… கட்சி இரண்டாம் பட்சமே… நான் நேர்மையாக இருந்தால் சேவை என்பது நம்பிக்கைக்கான ஒரு நிபந்தனை மட்டுமே. நாட்டுக்கு மிகப் பெரிய மீட்பு தேவை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
நமது தேசத்தின் மிகப் பெரிய பலமே அமைதியான நீர்நிலைகளை நோக்கி நாம் பயணிப்பதே. இதைச் செய்வதற்கான திறன் அரசியல்வாதிகளைப் பொறுத்தது. குறிப்பாக நிதானம் மற்றும் ஸ்திரத்தன்மையுடன் இருப்பவர்களைப் பொறுத்தது. நான் அதைச் செய்வேன். ஒரு நாட்டை மாற்றுவது என்பது ஸ்விட்ச் ஒன்றை போடுவது போல எளிதானது இல்லை அதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும். ஆனால் மாற்றத்துக்கான வேலை இன்றே தொடங்குகிறது.

பொறுமையான மற்றும் அமைதியான மறு உருவாக்கத்துக்கு இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. மரியாதையுடனும் பணிவுடனும் தேசத்தை புதுப்பிக்கும் இந்தப் பணியில் இணைந்து கொள்ள உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன். நமது பணி அவசரமானது. அதனை நாம் இன்றே தொடங்குவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

ஏஞ்சலா ரெய்னர் புதிய துணைப்பிரதமர்

Angela Rayner Ok
Angela Rayner

மேலும் கீர் ஸ்டார்மர்   மந்திரி சபையில் ஏஞ்சலா ரெய்னர் புதிய துணைப் பிரதமராவும், ரேச்சல் ரீவ்ஸ் நிதி மந்திரியாகவும் பொறுப்பேற்று உள்ளனர்.  கீர் ஸ்டார்மர்ருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

கீர் ஸ்டார்மர் 1962-ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி லண்டனில் சர்ரே ஆக்ஸ்டெட் பகுதியில் ஒரு தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தார். அவரது தாய் செவிலியராக வேலை செய்து வந்தார். பள்ளிப் படிப்பை முடித்த ஸ்டார்மர் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.

ஸ்டார்மர் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக, மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வழக்கறிஞராக இருந்தார். டோனி பிளேயர் பிரதமராக இருந்த போது பிரிட்டன் அரசு ஈராக் மீது படையெடுத்த நிலையில், அதை மிகக் கடுமையாக எதிர்த்தவர். 2015-ல் தான் இவர் தேர்தல் அரசியலுக்குள் நுழைந்தார். ஹோல்போர்ன் மற்றும் செயின்ட் பான்க்ராஸ் தொகுதியில் போட்டியிட்ட இவர் எம்.பி.யாக தேர்வானார். இவரின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக உடனடியாக லேபர் கட்சியில் முக்கிய பதவிகள் கிடைத்தன. இதையடுத்து ஸ்டார்மர் 2020 இல் லேபர் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, பிரிட்டனின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

மும்பையில் லட்சக்கணக்கான மக்களை தாண்டிய கிரிக்கெட் வீரர்களின் வெற்றி ஊர்வலம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *