நெல்லை மாவட்டம், வள்ளியூரைச் சேர்ந்த 43 வயதான மரம் வெட்டும் தொழிலாளி. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் முதல் மனைவியைப் பிரிந்து இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வந்த தொழிலாளிக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இதில், மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இரண்டாவது மகளுக்கு 15 வயதாகிறது. இவர், 8-ம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டார். தினமும் காலையில் அச்சிறுமியின் தாய், அருகிலுள்ள தோட்டத்திற்கு வேலைக்குச் சென்று விடுவார். இதனால் சிறுமி, சமைப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட வேலைகளைச் செய்வார். அவரது தந்தை மரம் வெட்டிவிட்டு மதியம் வீட்டிற்கு வந்து சாப்பிடுவது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி சிறுமியின் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவரது தாயார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்ப்பட்டார். அங்கு பரிசோதித்ததில் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 2024-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி சிறுமியின் தாயார் கோயிலுக்குச் சென்றிருந்த போது சிறுமியை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.