Created by 161 artists over 363 hours: The romantic gift actor Aamir Khan gave to his live-in partner.-161 கலைஞர்கள் 363 மணி நேரத்தில் உருவாக்கியது:லிவ்இன் பார்ட்னருக்கு நடிகர் ஆமிர்கான் கொடுத்த காதல்பரிசு

Spread the love

பாலிவுட் நடிகர் ஆமிர் கான் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி, இருவரையும் விவாகரத்து செய்துவிட்டார். தற்போது கௌரி என்ற பெண்ணுடன் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்துவருகிறார்.

தனது 60-வது வயதில்தான் தன் புதிய காதலியை வெளியுலகிற்கு ஆமிர் கான் அறிமுகம் செய்தார். இப்போது எங்கு சென்றாலும் தனது புதிய துணையை அழைத்துச் செல்கிறார். அவர் தனது புதிய துணையை மனைவியாக்கிக்கொள்ள முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருவரும் சேர்ந்து ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தனர். அதில் கௌரி அணிந்திருந்த மோதிரம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இருந்தது.

ஆமிர் கான் தனது காதலிக்கு இரண்டு மோதிரங்கள் வாங்கிக் கொடுத்துள்ளார்.

காதல் பரிசாக கொடுத்துள்ள அந்த மோதிரம் “QWEEN’ எனும் ஆடம்பர நகைப் பிராண்டைச் சேர்ந்தவை. அந்த நிறுவனம் ஆமீர் கான் வாங்கி இருக்கும் மோதிர பிராண்டை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தக்கூட இல்லை. ஆனால் ஆமிர் கான் அதற்குள்ளாகவே அத்திறுவனத்தின் வாடிக்கையாளராகிவிட்டார். ஆமிர் கான் பிரத்யேகமாகச் செய்து கொடுத்த இரண்டு மோதிரங்களில் ஒன்றை கெளரி அணிந்து வந்ததாக கூறப்படுகிறது.

காதலை ஒரேயொரு உணர்வின் மூலம் மட்டும் வெளிப்படுத்திவிட முடியாது என்று கருதி அவர் இரண்டு மோதிரங்களைத் கெளரிக்கு வாங்கி கொடுத்து இருக்கிறார் என்று கூறுகிறார்கள் பாலிவுட் வட்டாரத்தில்.

முதல் மோதிரத்தில், பிரேசிலைச் சேர்ந்த ஒரு பிரகாசமான நீல நிற(அக்வாமரைன்) வைரங்களால் சூழப்பட்டுள்ளது. இரண்டாவது மோதிரத்தில், மடகாஸ்கரைச் சேர்ந்த ஒரு உயர்தர ரூபி கல் இடம்பெற்றுள்ளது. ரூபி காதல் மற்றும் பேரார்வத்தைக் குறிக்கிறது. அதே சமயம் அக்வாமரைன் அமைதி, தெளிவு மற்றும் உணர்ச்சியைக் குறிக்கிறது. இந்த மோதிரம் தங்கத்தில் பதிக்கப்பட்டு, 40 வைரங்களால் சூழப்பட்டுள்ளது.

இதை உருவாக்க 363 மணிநேரம் ஆனதாம். மேலும் 131 கைவினைஞர்கள் இணைந்து பணியாற்றினர். ரூபி இரத்தினக் கல் பதித்த மோதிரத்தை உருவாக்க 812 மணிநேரம் எடுத்துக்கொண்டது. ஆமிர் கான் தனது காதலிக்காகவே இந்தச் சிறப்பு மோதிரத்தை வடிவமைத்துள்ளார். எனினும், இது ஒரு நிச்சயதார்த்த மோதிரம் அல்ல என்றும், மாறாக, கௌரிக்கு அளிக்கப்பட்ட ஒரு விலைமதிப்பற்ற காதல் பரிசுதான் என்று ஆமீர் கான் தரப்பில் கூறப்படுகிறது. கௌரிக்கு ஆறு வயதில் ஒரு மகனும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *