இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் அண்மையில் நிறைவடைந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தத் தொடர் முழுவதுமே இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் மிகவும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழந்தனர்.