அதாவது, வினோத் – முனியம்மாள் தம்பதிக்கு ஏற்கெனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இரண்டாவது முறையாக கருத்தரித்த முனியம்மாளுக்கு வயிற்றுக்குள் குழந்தையின் அசைவு இல்லாமல் இருந்திருக்கிறது. இதையடுத்து, கடந்த 22-ம் தேதி வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தபோது, சிசு உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

அன்று காலை 11.30 மணியளவில், அறுவை சிகிச்சை மூலம் பெண் சிசுவின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. மருத்துவர்கள் சிசுவின் உடலை தந்தை வினோத்திடம் ஒப்படைத்திருக்கின்றனர். சொந்த கிராமத்துக்கு சிசுவின் உடலை எடுத்துச்சென்று நல்லடக்கம் செய்ய விரும்பாத வினோத்தும், அவரின் தாய் சுமதியும் மருத்துவமனைக்கு அருகிலுள்ள கால்வாயில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். அன்று மழை பெய்த காரணத்தினால், கழிவுநீர் கால்வாயில் தண்ணீரும் அதிகமாக இருந்திருக்கிறது. அதில், சிசுவின் உடல் மூழ்கி, 2 நாள்களாக மிதந்து வந்ததும் தெரியவந்தது.
நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இக்கொடூர விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், கல்நெஞ்சம் கொண்ட வினோத்தையும் அவரின் தாய் சுமதியையும் கைது செய்தனர். மேலும், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சிசுவின் உடலைப் பெற்று போலீஸாரே வேலூர் பாலாற்றங்கரையில் உள்ள சுடுகாட்டில் நல்லடக்கம் செய்து மலர் தூவினர்.