CSK: இம்பேக்ட் பிளேயராக தோனி? – சிஎஸ்கேவின் 'ஃபினிஷர்' ரோலில் களமிறங்கும் 20 வயது இளம்வீரர் யார்?

Spread the love

ஐபிஎல் 2026 திருவிழா மார்ச் 28-ல் தொடங்கவிருக்கிறது. இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் மத்தியில் ஒரு செய்தி காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

மார்ச் 30-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே களம் காண உள்ளது.

தோனி
தோனி

ஆனால், இம்முறை தோனி ஓர் ‘இம்பேக்ட் பிளேயராக’ (Impact Player) மட்டுமே ஆடுவார் என்றும், அவருக்கு பதிலாக ஃபினிஷர் ரோலில் இளம் வீரர் கார்த்திக் சர்மா களமிறக்கப்படுவார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

யார் இந்த கார்த்திக் சர்மா?

ராஜஸ்தானைச் சேர்ந்த கார்த்திக் சர்மாவிற்கு 20 வயதே ஆகிறது. இவரை சிஎஸ்கே 14.20 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

அதிரடி பேட்டராக அறியப்பட்ட இவர், கடந்த ரஞ்சி சீசனில் உத்தரகாண்ட்டுக்கு எதிரான அறிமுகப் போட்டியிலேயே சதமடித்து அசத்தியிருந்தார்.

அதேமாதிரி, கடந்த விஜய் ஹசாரே தொடரிலும் 400+ ரன்களைச் சேர்த்து ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன்களை எடுத்த வீரராக வந்தார்.

கார்த்திக் சர்மா
கார்த்திக் சர்மா

19 வயதுக்குட்பட்ட ராஜஸ்தானின் இளையோர் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.

ராஜஸ்தான் அணிக்காக 11 டி20 போட்டிகளில் விளையாடி இதுவரை 27 சிக்ஸர்கள் மற்றும் இரண்டு அரை சதங்கள் உட்பட 316 ரன்கள் அடித்து விளாசியிருக்கிறார்.

ஃபினிஷர் ரோலில் மிகச்சிறப்பாக தன்னை பொசிஷன் செய்து வருகிறார். தோனியும், முன்பைப் போல போட்டிகளை முடித்துக் கொடுக்கும் நிலையில் இல்லை.

கார்த்திக் சர்மா
கார்த்திக் சர்மா

அதனால் கார்த்திக்கை ஃபினிஷர் ரோலில் களம் இறக்கி முயற்சி செய்து பார்க்கலாம் என்று சிஎஸ்கே அணி திட்டமிட்டிருப்பதாக, தகவல் வெளியாகின்றன. நீண்டகால அடிப்படையில் கார்த்திக் சர்மா ஒரு நல்ல தேர்வாகவும் இருப்பார் என சிஎஸ்கே நிர்வாகம் கருதுவதாகவும் தெரிகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *