அவர்கள் தெரிவித்த முதல் வீரர் பிரசாந்த் வீர் தான். ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு டிரேடிங் செய்துவிட்டோம்.
அதனால் அணியில் நம்பர் 7 க்கு ஒரு வீரர் தேவைப்பட்டார். அந்த வீரர் பேட்டிங், பெளலிங் இரண்டிலும் திறமை கொண்டவராக இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.

அந்தவகையில் தான் பிரசாந்த் வீரை அணிக்கு தேர்வு செய்தோம். நாங்கள் நல்ல அணியை உருவாக்கியிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
வழக்கம் போல தல தோனியும், ருதுவும் அணிக்காக சிறந்த விஷயங்களை செய்வார்கள்.
ரசிகர்களே, இந்த ஆண்டு சிதம்பரம் ஸ்டேடியத்தில் சிஎஸ்கேவை பார்த்து சந்தோஷப்படுவீர்கள். நாங்கள் கோப்பையை வெல்வோம் என்று நம்புகிறேன்” என்று பேசியிருக்கிறார்.