Cyclone Ditwah: இலங்கையில் 153 பேர் மரணம்; சென்னைக்கு எச்சரிக்கை; டிட்வா புயலின் அடுத்த நகர்வு என்ன?

Spread the love

இலங்கையில் டிட்வா புயல் தாக்கத்தால் வானிலை தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது. கன மழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு, சூறைக் காற்று போன்றவற்றால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

Cyclone Ditwah: உயிரிழப்பு, இடப்பெயர்வு, பாதிப்பு…

இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153 எனக் கூறப்படுகிறது. 190க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதனால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் உருவாகியிருக்கிறது.

Cyclone Ditwah: உயிரிழப்பு, இடப்பெயர்வு, பாதிப்பு...
Cyclone Ditwah: உயிரிழப்பு, இடப்பெயர்வு, பாதிப்பு…

தீராத கனமழை தீவு முழுவதும் அன்றாட வாழ்க்கையைப் புறட்டிப்போட்டுள்ளது. பேரிடம் மேலாண்மை மையம் கூறுவதன்படி, 25 மாவட்டங்களில் 774,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 100,000க்கும் மேற்பட்டோர் 798 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய – இலங்கை குழுக்களின் மீட்புப் பணிகள்

நிலச்சரிவால் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தகவல்தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. நிலையில்லாத வானிலையும் இலங்கையின் இயற்கை சூழலும் மீட்புப் பணிகளுக்குச் சவாலாக இருக்கின்றன.

மீட்புப் பணிகளில் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த விமான, தரைப்படைகள் ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றன.

வெள்ளத்தால் முற்றிலும் தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்ட இடங்களில் சிக்கியிருப்போருக்கு அவசர உதவிப்பொருட்களை வழங்குகின்றனர். ஆபத்தான இடங்களில் தவிப்போரைப் பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றுகின்றனர்.

ஆபரேஷன் சாகர் நடவடிக்கையின் கீழ் இந்திய ராணுவம் மீட்புப் பணிகளில் இறங்கியிருக்கிறது. பன்னாலா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 8 பேரை இந்தியக் கடற்படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் காப்பாற்றியதாகக் கூறப்படுகிறது.

விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தில் இந்தியப் பயணிகள் பலர் சிக்கியிருக்கின்றனர். அவர்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கி வருகிறது இந்தியத் தூதரகம்.

டிட்வா புயல் இன்று (நவ. 30) அதிகாலை நிலவரப்படி, ஜாஃப்னாவிலிருந்து 80 கி.மீ வடகிழக்கே மையம் கொண்டுள்ளது. அங்கிருந்து வடக்கு-வடமேற்கு திசையில் சென்னையை நோக்கி நகர்கிறது.

தெற்கு ஆந்திரா முதல் புதுச்சேரி வரையிலான இடங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மழை
புதுச்சேரியில் மழை

புயலின் தீவிரம் இன்று மாலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Deep Depression) குறைய வாய்ப்புள்ளது. எனினும் வட தமிழகத்தில் கடலூர் மாவட்டத்துக்கும் புதுச்சேரிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று வட தமிழகத்​தில் பெரும்​பாலான இடங்​களி​லும், தென் தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். 

டெல்​டா, தென் தமிழக கடலோர மாவட்​டங்​கள், காரைக்​கால் பகு​தி​களில் மணிக்கு அதி​கபட்​சம் 75 கி.மீ. வேகத்​தில் பலத்த காற்று வீசக்​கூடும். வட தமிழக கடலோர மாவட்​டங்​கள், புதுச்​சேரி​யில் 80 கி.மீ. வேகத்​தில் தரைக்​காற்று வீசக்​கூடும்.

இன்று திரு​வள்​ளூர், ராணிப்​பேட்டை, சென்​னை, காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, விழுப்​புரம், திரு​வண்​ணா​மலை, வேலூர், திருப்​பத்​தூர், தரு​மபுரி, அரியலூர், புதுக்கோட்டை மாவட்​டங்​களில் கன முதல் மிக கனமழை​க்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *