வங்கக்கடலில் உருவான “டிட்வா’ புயல் இலங்கையைப் புரட்டி போட்டிருக்கிறது.
கனமழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக இதுவரை 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
நிலைமையை சமாளிக்க ‘ஆபரேஷன் சாகர் பந்து’ மூலம் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்திருக்கிறது.
இந்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிட தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாக ஸ்டாலின் தனது எக்ஸ் தளபக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.