அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மணிகண்டனின் மனைவி முத்துமாரி, கடந்த ஓராண்டுக்கு முன்பு சுந்தரிடம் பத்திரம் எழுதச் சென்றுள்ளார். அப்போது சுந்தருக்கும் முத்துமாரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் திருமணம் மீறிய உறவாகியுள்ளது.
இதனால், இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இதனையறிந்த மணிகண்டன், முத்துமாரியையும் சுந்தரையும் கண்டித்துள்ளார். ஆனாலும், இருவரும் செல்போனில் பேசுவதை நிறுத்தவில்லை. இதனால், கணவன் – மனைவி இருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், முத்துமாரி கணவரைப் பிரிந்து இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்றுள்ளார். ஆனாலும், முத்துமாரியும், சுந்தரும் தொடர்ந்து செல்போனில் பேசியும், தனிமையில் சந்தித்தும் வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சுந்தர் வசித்து வரும் இட்டேரியிலுள்ள வீட்டின் அருகேயே முத்துமாரி குழந்தைகளுடன் ஒரு வாடகை வீட்டில் குடி புகுந்துள்ளார். இது, மணிகண்டனுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. பலமுறை சொல்லியும் சுந்தர் கேட்காததால், மணிகண்டனும் அவரது தம்பி சுடலையும் அரிவாளால் சுந்தரை வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்திய அரிவாள்கள் மற்றும் பைக்கை போலீஸர் பறிமுதல் செய்தனர்.