சென்னை:
தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி(வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் வருகிறது. எனவே வெள்ளிக்கிழமை (நவம்பர் 1&ந்தேதி) அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
தீபாவளி பண்டிகை
இந்த நிலையில் நவ.1&ந்தேதி அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தீபாவளி பண்டியை முன்னிட்டு 31&ந்தேதி வியாழக்கிழமை முதல் 3-ந்தேதி வரை தொடர்விடுமுறை கிடைக்கும். இதனால் சென்னை மற்றும் வெளியூர்களில் வசிப்பவர்கள் தீபாவளி பண்டிகையகை தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட திட்டமிட்டு வருகிறார்கள். விடுமுறைதொர்பாக அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
1-ந்தேதி விடுமுறை
தீபாவளி பண்டிகையை 31.10.2024 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 01.11.2024 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்தும் அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 09.11.2024 அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.