தீபாவளி: நெல்லை, மதுரைக்கு சிறப்பு ரயில்கள்!

Dinamani2fimport2f20142f102f82f42foriginal2ftrain.jpg
Spread the love

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நெரிசலை குறைப்பதற்காக அக். 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்

அக். 29-ல் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில்(வண்டி எண்: 06001) மறுநாள் கன்னியாகுமரியை சென்றடையும். மறுவழித்தடத்தில் அக். 30-ல் பிற்பகல் 2.45 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த ரயில்(வண்டி எண்: 06002) மறுநாள் காலை 3.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரல்- கன்னியாகுமரி இடையே அக்டோபர் 29 மற்றும் நவம்பர் 5 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. மறுவழித்தடத்தில் கன்னியாகுமரி – எழும்பூர் இடையே அக்டோபர் 30 நவம்பர் 6 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.

இந்த சிறப்பு ரயில் விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியே இயக்கப்படுகிறது.

அக். 30-ல் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில்(வண்டி எண்: 06005) மறுநாள் செங்கோட்டையை சென்றடையும். மறுவழித்தடத்தில் அக். 31-ல் இரவு 7.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த ரயில்(வண்டி எண்: 06006) மறுநாள் காலை 9.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரல் – செங்கோட்டை இடையே அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 6 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. மறு வழித்தடத்தில் செங்கோட்டை – சென்னை சென்ட்ரல் இடையே அக்டோபர் 31, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.

இந்த சிறப்பு ரயில் சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தென்காசி வழியே இயக்கப்படுகிறது.

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை(அக். 23) காலை 8 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *