மும்பை:
நடிகை தீபிகா படுகோனே கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தீபிகா படுகோனே தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் தீபிகா படுகோனே கர்ப்பம் அடைந்தார். அவர் கர்ப்பகாலத்தில் உள்ள புகைப்படங்களையும் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே நேற்று நடிகை தீபிகா படுகோன், மும்பை கிரிகோன் பகுதியில் உள்ள எச்.என் ரிலையன்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தீபிகா படுகோனும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசவத்திற்கு முன்பாக ரன்வீர் சிங், தீபிகா படுகோனே உள்ளிட்ட குடும்பத்தினர் மும்பையில் உள்ள பிரபல சித்தி விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.